“எய்ம்ஸ் மாதிரி இல்ல..” வானதி சீனிவாசன் கேள்விக்கு.. நறுக் பதிலளித்த ஸ்டாலின்! பேரவையில் சிரிப்பலை
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை போல அல்லாமல், கோயம்புத்தூரில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
கோவை, தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான மாவட்டமாகும். கொங்கு மண்டலத்தின் அடையாளமாக திகழும் இந்த மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. எனவே இதை கைப்பற்ற திமுக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் கட்சி இதற்காக கொடுத்த விலையும் அதிகம். அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டதிலிருந்து திமுகவின் செல்வாக்கு இங்கு செழிப்பாக வளர்ந்தது. ஆனால், தற்போது செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை இழந்து சிறையில் இருக்கிறார்.

இருப்பினும் அவர் உருவாக்கிய அரசியல் மைலேஜை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக, திமுக பல்வேறு சிறப்பு திட்டங்களை கோவையை சுற்றி அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
அதாவது, "இளைய தலைமுறையினரின் அறிவு தாகத்தைத் தூண்டும் விதமாக கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம் கலைஞர் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும். இந்த நூலகத்தில் உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் இடம்பெறுவதுடன், விண்வெளி, இயந்திரவியல், மெய்நிகர் தோற்றம் என பல்வேறு அறிவியல், பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த கண்காட்சிகள் நடத்தப்படும் வகையில் அறிவியல் மையம் ஏற்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பு எழுந்தது.
இதனையடுத்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், "கோவையில் நூலகம் அமையும் என அறிவித்ததற்கு நன்றி. இந்த நூலகம் எப்போது எங்கே அமையும்? இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? பணிகள் எப்போது தொடங்கும்?" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, வானதி சீனிவாசனின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, "இந்த ஆட்சி சொன்னதை செய்யும், சொல்வதைதான் செய்யும். மதுரையில் உலக தரம் வாய்ந்த நூலகம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறதோ, மதுரை அலங்காநல்லூரில் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, இன்னும் சில தினங்களில் கலைஞர் நினைவகம் அமைய இருக்கிறதோ, அதேபோல சொன்னபடி நூலகம் திறக்கப்படும்.
வானதி சீனிவாசனுக்கு குறிப்பாக சொல்லிக்கொள்வதெனில், மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததை போல் அல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் நூலகம் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் திறக்கப்படும்" என்று கூறினார். இவரது பேச்சால் சட்டப்பேரவையில் லேசான சிரிப்பலை எழுந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications