Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு லண்டனிலிருந்து, சென்னை மாநகர முன்னாள் மேயரும் திமுக எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியனின் பேரன் மற்றும் பேத்திகள் லண்டனிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து பாடி உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது 97 வயது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ma subramanians granddaughter and grandson sing happy birthday for karunanidhi

திமுகவினர் மட்டுமல்லாமல் பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்களும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதேபோல் பலர் சமூக வலைதளங்களில் கருணாநிதியின் சாதனைகள் மற்றும் வாழ்க்கை குறிப்புகளை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு லண்டனிலிருந்து, சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்ட தொகுதி எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியனின் பேரன் மற்றும் பேத்திகள் லண்டனிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து பாடி உள்ளனர்.

இது தொடர்பாக மா சுப்பிரமணியன் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், லண்டனிலிருந்து கலைஞர் தாத்தாவுக்கு வாழ்த்துப்பாடும் எனது பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும் என்று வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் "குழந்தைகள், கலைஞர் தாத்தா நீங்கள் சொர்க்கத்தில் நல்லா இருக்கனும். நம்ம திமுகவை பார்த்துப்போம். அடுத்த வருசம் திமுக வெற்றி பெறும். அதுதான் உங்களுக்கு கிப்ட். இப்ப நாங்க உங்களுக்கு ஹேப்பி பர்த்டே பாடுகிறோம்" என்று கூறுகிறார்கள். இந்த வீடியோவில் ஹேப்பி பர்த்டேவும் பாடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+