மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு.. அடுத்த குண்டை போட்ட மா.சு
சென்னை: மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் 10 ஆண்டுகளாக சுகாதார நிலையங்களைச் சீரமைக்கவில்லை.
அதனால்தான் நாங்கள் சீரமைக்க முடிவு செய்துள்ளோம். ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் முடிந்து தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை.

உருமாறும் வைரஸ்
வைரஸ்கள் உருமாறி கொண்டே இருப்பதால் பாதிப்புத் தன்மை இன்னும் புரியாமல் உள்ளது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இந்த நோய் பாதித்தோர் ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர்.

மருத்துவ திட்டம்
அவர்களை கண்டறிந்து வீடு தேடி வரும் மருத்துவ திட்டத்தையும் முதல்வர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் வீடு வீடாக கணக்கெடுக்கப்பட்டு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.

இறப்பு பாதி
மேலும் சிறுநீரகம் பாதித்தோருக்கும் மொபைல் வாகனம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை , முடக்குவாதம் பாதித்தோருக்கு பிசியோதெரபி உள்ளிட்டவை வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 5.5 லட்சம் இறப்பு பாதியாக குறையும்.

முறைகேடு
மருத்துவர்களுக்கு உணவு, தங்கும் விடுதிக்கான வாடகையில் முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தினமும் 20 லட்சம் வரை மிச்சப்படுத்தி வருகிறோம் என்றார். அண்மையில் மின்சாரத் துறையில் முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications