Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிபட்ட தனபால் பெயர்.. தமிழ்நாட்டின் முதல் தலித் முதலமைச்சர்? மாஸ் மன்னனாகி இருக்க வேண்டிய மாமன்னன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் பெயர் முதலமைச்சர் பரிசீலனையிலும் இருந்ததை அறிவீர்களா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் மாமன்னன். பட்டியலினத்தவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், அரசியல் களத்திலும் நிகழும் அடக்குமுறைகளை இப்படம் தோலுரித்துக் காட்டி உள்ளது. அனைத்து திரையரங்குகளிlலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

Maamannan row - TN EX Speaker Dhanapal name is considered for CM post during Dharma Yutham time

இந்த நிலையில் இந்த படத்தில் மாமன்னனாக நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை நோக்கி ஊடகங்கள் செல்லத் தொடங்கிவிட்டன. அவரும் ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டி அளித்து வருகிறார். இதனால் சில ஆண்டுகளாக ஊடக வெளிச்சம் இன்றி இருந்த தனபால் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்து இருக்கிறார்.

பட்டியலினத்தில் பிறகு சாதி ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து பின்னாளில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் தமிழ்நாடு சட்டசபையின் சபாநாயகராக உயர்ந்த தனபாலின் பெயர் ஒரு முறை முதலமைச்சர் தேர்வின்போது பரிசீலிக்கப்பட்டது நினைவில் உள்ளதா? ஆம் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் முதல் தலித் முதலமைச்சர? என செய்திகளும் வரத் தொடங்கின.

இதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2016 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் சபாநாயகராக அறிவிக்கப்பட்டார் தனபால். ஆனால் அதே ஆண்டிலேயே ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓராண்டு ஆட்சியை கூட நிறைவு செய்யாத நிலையில் காலமானார்.

அந்த நெருக்கடியான சூழலிலும் தனபாலே சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய பிறகு சசிகலாவால் முதலலமைச்சராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. ஒரு பக்கம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அதிகரித்த நிலையில், தனபால் மூலம் தலித் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற முயன்றார் டிடிவி தினகரன்.

அப்போதுதான் தமிழ்நாட்டின் முதல் தலித் முதலமைச்சர் என்ற கோஷமும் வந்தது. ஓரிரு நாட்கள் இதுதான் ஊடகங்களின் முக்கிய விவாதப் பொருளாக இருந்து. சசிகலாவின் சகோதரர் திவாகரனும் தனபாலையே முதலமைச்சராக்க விரும்பினார். ஆனால், டிவிஸ்ட் கொடுக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வமும் - எடப்பாடி பழனிசாமி சேர்ந்த சசிகலா, டிடிவி தினகரனும் கழட்டி விடப்பட்டனர்.

அப்போதும் டிடிவி தினகரன் தனபாலை வைத்தே காய் நகர்ந்த முயன்றார். தனபால் மூலம் தலித் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டால் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பு ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்படும் என எண்ணி அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனபாலுக்கு துணை முதலமைச்சர் பதவி தர ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

6 முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை அமைச்சர், ஒரு முறை சபாநாயகர் என முக்கிய பதவிகளை வகித்த தனபாலை முதலமைச்சராக்கும் பேச்சே அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்தடுத்து டுவிஸ்டுகளால் அந்த பேச்சு காற்றோடு கரைந்து போனது. அது மட்டும் நடந்திருந்தால் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத ஆளாக இருந்திருப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+