ஜாய் கிரிசில்டா வீடியோவால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பு.. ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம்
சென்னை: தன்னைப் பற்றி ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்து தெரிவிக்கவும், தனக்கு எதிரான வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜாய் கிரிசில்டா வீடியோவால் 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு என மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் தரப்பு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தான் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு
இதுதொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஜாய் கிரிசில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். தனது கேட்டரிங் நிறுவனமான மாதம்பட்டி பாகசாலாவுக்கு எதிராக அவதூறு பரப்பு கருத்துக்களை பேச ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரங்கராஜ் உடனான தகராறில் அவர் பங்குதாரராக உள்ள தங்கவேலு பிரைவட் லிமிடெட் நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசியதாக ஜாய் கிரிசில்டா மீது அந்த நிறுவனம் புகார் அளித்துள்ளது.
மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா பேசியதால் 15 நாளில் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வாதிட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் பார்ட்னராக உள்ள மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் அவரை பாதுகாப்பதாக ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications