பொய்கள் புயல் போல் வீசும்.. உண்மை மெதுவாய் பேசும்.. அப்பாவுக்கு சப்போர்ட் செய்த மதன் கார்க்கி!
வைரமுத்துவுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகள் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மீடூ பஞ்சாயத்து ஆரம்பித்ததில் இருந்து வைரமுத்து பற்றின குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான கருத்தும் சொல்லாமல் மௌனமாக இருந்து வந்த அவரது மகனும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி தற்போது முதன்முறையாக தந்தைக்கு பாடல் வரிகளாலேயே ஆதரவு தெரிவித்துள்ளார்.
வைரமுத்து பற்றின மீடூ புயல் புகார் மாநிலம் எங்கும் வீசியது. ஆனால் இப்போது இந்த புயலை உருவாக்கின சின்மயி, "ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறேன், வந்தால் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓய்ந்துபோய் விட்டார்.
|
பிரதான இடம்
கடந்த 15 நாட்களாகவே ஒட்டுமொத்த இணையதளமும் மீடூ என்ற இரண்டு எழுத்தை ஆக்கிரமித்தன. மீடியாக்கள் முழுவதும் வைரமுத்து - சின்மயி செய்திகள் பிரதான இடத்தை பிடித்தன.

மதன் கார்க்கி
இது சம்பந்தமாக வைரமுத்து ஒருமுறை மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவரோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ எந்த கருத்தையும் சொல்லாமல் வந்தனர். குறிப்பாக வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியிடம் இருந்து இது சம்பந்தமான கருத்து அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் மதன் கார்க்கி சின்மயியின் நீண்ட கால நண்பர் என்பதுதான்.

கல்யாண பத்திரிகை
அதுமட்டும் இல்லாமல், தன் கல்யாணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைக்க காரணமே மதன் கார்க்கி தன்னை பற்றி தவறாக எதுவும் நினைத்து கொள்ள கூடாதுதான் என்று காரணம்தான் என சின்மயி விளக்கமும் அளித்திருந்தார். ஆனால் அப்போது கூட மதன்கார்க்கி இந்த விவகாரம் பற்றி எதையுமே பேசவில்லை.

பொய்கள் புயல்போல..
தற்போது, முதன்முறையாக மதன்கார்க்கி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள தனது தந்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதனை வெளிப்படுத்தும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் "லிங்கா" படத்தில் வரும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற பாடலைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதே பாடலில் வரும் வரிகளான 'பொய்கள் புயல்போல் வீசும்.. ஆனால் உண்மை மெதுவாய் பேசும்' என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளார். இந்த வரிகளை எழுதியது வைரமுத்துதான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications