Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை! சராசரி குடும்பத் தகராறு தான்! பதறும் மாதவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என அவரது கணவர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தன்னை தனது கணவர் மாதவன் துன்புறுத்தி வருவதாக ஜெ.தீபா நேற்று முன் தினம் இரவு வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த நிலையில் அவர் இந்த மறுப்பு அறிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெ.தீபாவின் கணவர் மாதவன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மருந்தின் தாக்கம்

மருந்தின் தாக்கம்

''எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது.''

தீபாவை நேசிக்கிறேன்

தீபாவை நேசிக்கிறேன்

''அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரி ஆக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸடே்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும்.''

 பதறும் மாதவன்

பதறும் மாதவன்

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் இவ்வாறு பதறிப்போய் மறுப்பு அறிக்கை வெளியிடுவதற்கு காரணம், தனது மனைவி தன்னைப் பற்றி குற்றஞ்சாட்டி நண்பர்கள், உறவினர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் பார்க்கும் படி வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்திருந்தது தான். இது மட்டுமல்லாமல் மாதவன் டார்ச்சர் செய்வதாக தீபா மனம் திறந்து நேற்று பேட்டியும் கொடுத்திருந்தார்.

குடும்ப வன்முறை

குடும்ப வன்முறை

தன் மீது குடும்ப வன்முறை வழக்கு பாய்வதற்கு வாய்ப்பிருக்கும் என்பதால் மாதவன் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா அண்ணன் மகளை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் தான் மாதவன் லைம் லைட்டிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் மாதவன் இயக்கம் ஆரம்பித்தது திரும்பிப்பார்க்கத் தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+