நாங்க குவாட்டரில் கை வைத்தால்தான்.. நீங்கள் கோட்டையில் கால் வைக்க முடியும்.. டைமிங்கில் வந்த ரைமிங்
சென்னை: மது பிரியர்களின் டெபாசிட் உங்களிடம், ஆனால் உங்கள் டெபாசிட் எங்கள் கையில் உள்ளது என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் தனது முதல் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசியுள்ளார்.
நடிகரும் தமிழ் மண் ஆர்வலருமான மன்சூர் அலிகான் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திருச்சியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிட்டார்.

நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்த மன்சூர் அலிகான், அந்த கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.
ஆரணி லோக்சபா தேர்தல்: அந்த கட்சி சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி எம்பி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் முதல் பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தார். அவர் பேசுகையில் கட்சி கொடி இல்லாமல் கிராமங்கள் இருக்கலாம். ஆனால் கட்டிங் போடாத கிராமங்கள் இருக்கவே முடியாது.
குவாட்டரில் கை வைத்தல்: நாங்கள் குவாட்டரில் கை வைத்தால்தான் யாருமே கோட்டையில் கொடியேற்ற முடியும். அது செங்கோட்டையாக இருந்தாலும் ஜார்ஜ் கோட்டையாக இருந்தாலும் நாங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. தமிழகத்தின் அரசியல் பல்லாவரத்தில் தீர்மானக்கப்படுகிறது. எனக்கு இது முதல் மேடை.
டாஸ்மாக் கடைகள்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மது இல்லாமல் மாநிலத்தை நடத்தக் கூடிய எந்த முதல்வர்களும் கிடையாது. தமிழகத்தில் 5400 பார்களும் கிட்டதட்ட 6000 மதுக்கடைகள் உள்ளன. பார்களே எங்களுக்கு கிளைகள். டாஸ்மாக் கடைகளே எங்களுக்கு அரசியல் பயிற்சி பட்டறை. பல்லாவரத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி மாநாடு என்றார்களே கூட்டம் குறைவாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம்.
மதுபாட்டிலுக்கு ரூ 10: உளவுத் துறைக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். 6 மணிக்கு மேல் எங்கள் தொண்டர்கள் எல்லாம் டாஸ்மாக் கடைகளில் அரசியல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். டாஸ்மாக் மேல் ரூ 10 டெபாசிட் வாங்குங்கள். அது உங்கள் பைக்குள் இருக்கிறது. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் டெபாசிட் எங்கள் கையில் இருக்கிறது.
மதுவை ஒழிக்க: மதுவை ஒழிக்க அனைத்து வேலைகளையும் செய்வோம். டாஸ்மாக் மதுக் கடையில் தத்தளிக்கும் மது பிரியர்களுக்கு வழிகாட்டியாக இந்த செல்லபாண்டியனும் மன்சூர் அலிகானும் இருப்போம். வரும் தேர்தலில் நீலகிரியோ கன்னியாகுமரியோ கும்மிடிப்பூண்டியாக இருக்கட்டும், சென்னை மாநகரமாக இருக்கட்டும், நீங்கள் டெபாசிட் வாங்க வேண்டும் என்றால் மன்சூர் அலிகானை ஆதரித்தால்தான் முடியும்.
மன்சூர் அலிகான் கட்சி: இத்தனை குடித்துவிட்டு கோழி பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பொண்டாட்டியை அடித்தோம், பொண்டாட்டியிடம் நாங்கள் அடி வாங்கினோம். இன்று அதெல்லாம் முடிந்துவிட்டது. அரசியல் மாற்றத்தை விரும்புகிறோம். அதற்கு தயாராக இருக்கிறோம். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியில் ஜாதி, மதம், மொழி என்ற பாரபட்சம் இல்லை. அனைவரும் சமம் என்ற இலக்கோடு பயணிக்கிறோம்.
பாட்டில் சின்னத்தில் செல்லபாண்டியன்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 8 ஆயிரம் வாக்குகளில் தோற்றார். நான் பாட்டில் சின்னத்தில் போட்டியிட்டு 2500 வாக்குகளை பெற்றேன். சிங்கிளாக போன போதே நான் அவ்வளவு வாக்குகளை பெற்றேன். இப்போது மன்சூர் அலிகானுடன் சேர்ந்தால் இன்னும் நிறைய வாக்குகள் கிடைக்கும். இவ்வாறு செல்லபாண்டியன் பேசினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications