மதுராந்தகத்தில் முட்டை பரோட்டோ.. தாராபுரத்தில் வீச்சு பரோட்டோ.. திமுக - அதிமுகவை கிண்டல் செய்த நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அதிமுக என இருகட்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையில் மதுராந்தகத்தில் முட்டை பரோட்டோ, தாராபுரத்தில் வீச்சு பரோட்டோ என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கிண்டல் செய்துள்ளார்.

madhuranthakam-muttai-parotta-and-dharapuram-veechu-parotta-minister-ctr-nirmal-kumar-tease-dmk-and

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த 2 தொகுதிகளிலும், தவெக வேட்பாளர்கள் வெ்றி பெற்றனர்.

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக, அதிமுக கட்சிகள் இந்த 2 சட்டசபை தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளன. இதன்மூலம் தமிழக சட்டசபையில் தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இந்த இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ''மதுராந்தகத்தில் முட்டை பரோட்டோ... தாரபுரத்தில் வீச்சு பரோட்டா...'' என்று திமுக மற்றும் அதிமுகவை கிண்டல் செய்துள்ளார்.

முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். முக ஸ்டாலின், தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வீழ்த்தியிருந்தார். இதுபற்றி முதல்வர் விஜய் திமுகவை கிண்டல் செய்திருந்தார்.

"நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர்'' என்று கூறியிருந்தார். கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தின்போது 5 நிமிடம் பேசியதை கேட்டு மக்கள் முக ஸ்டாலினை தோற்கடித்துவிட்டனர் என்பதை தான் அவர் இப்படி கிண்டலாக பேசியிருந்தார்.

இந்த கிண்டல் தொனியில் தான் தற்போது அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதியில் திமுக, அதிமுகவின் தோல்வியை முட்டை பரோட்டோ, வீச்சு பரோட்டா என்று கிண்டல் செய்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+