மெட்ராஸ் டே 2023: ராமானுஜம் முதல் அப்துல் கலாம் வரை மேதைகளை உருவாக்கிய சென்னை.. தென்னிந்தியாவின் ஹப்
சென்னை: (Madras Day/ மெட்ராஸ் டே) கல்வித் துறையில் வியக்கத்தக்க பங்களிப்பை வழங்கிய பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பள்ளிகளை கொண்ட கல்வி மையமாக சென்னை திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்படுகிறது. சிங்கார சென்னை, வந்தாரை வாழ வைக்கும் சென்னை என பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் அடையாளமாக இன்றும் அவர்கள் அமைத்த கோட்டைகள், கட்டடங்கள், அரசு அலுவலகங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. சென்னைக்கு வந்துவிட்டால் ஒரு பெட்டி கடை வைத்தும் பிழைத்து கொள்ளலாம் என்ற அளவுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் தருகிறது.
இப்படிப்பட்ட சென்னைக்கு இப்போது 383 வயது முடிந்து 384 வயதாகிறது. சென்னப்பட்டினம், பட்டினம், மதராஸபட்டினம், மதராஸ், மெட்ராஸ், சென்னை என்ற பெயர்களை கொண்டது. இன்று சென்னையின் 384 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் அப்பா, அம்மாவை தவிர வேறு என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். எல்லாமே கிடைக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் பலர் இங்கு வந்து வாங்குகிறார்கள். சென்னைக்கு பெரும்பாலும் மக்கள் வருவது பிழைப்புக்காக என்பதை தாண்டி, அவர்கள் இங்கு வருவது படிப்புக்காகவும்தான்.
தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் சிறப்பாக படிக்க வேண்டும். நாம்தான் படிக்கவில்லை, பிள்ளையாவது பட்டினத்தில் படிக்க வேண்டும் என்ற கனவுடன் ஏராளமானோர் சென்னைக்கு இடம்பெயர்கிறார்கள். ஊரில் கடல் போன்று வீடு வாசலை விட்டுவிட்டு சென்னையில் ஒரு புறா கூண்டு சைஸ் வீட்டில் அதிக வாடகை கொடுத்து குடியிருக்கிறார்கள்.
படிப்பிற்காக கஷ்ட நஷ்டங்களை தாங்கி கொள்கிறார்கள். குறைந்தது கல்லூரி படிப்பையாவது சென்னையில் கற்றுக் கொண்டால்தான் எதிர்காலம் என கருதுவோரும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஆங்கில மொழி அறிவு. சென்னை படித்தால் இந்த அறிவு தானாக வரும் என நம்புகிறார்கள். சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என்பது முதல் அனைத்துமே ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது.
சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில்கூட சிறப்பான கல்வி கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் நல்ல கட்டமைப்புடன் இருந்து வருகின்றன. இந்த மாநகராட்சி பள்ளியில் படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் என நிறைய பேர் உருவாகியுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
கல்வி என எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் இருந்து ரூ 2 லட்சம் வரை இருக்கிறது. நம் வருமானத்திற்கு ஏற்ற இடம் எது என்பதை பார்த்து மக்கள் சேர்க்கிறார்கள். அத்துடன் சென்னையில் மெட்ராஸ் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி நிலையங்கள் உள்ளன.
இந்த சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி வி கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர் வெங்கட்ராமன், ஏபிஜெ அப்துல் கலாம் உள்ளிட்ட குடியரசுத் தலைவர்கள், துணை குடியரசுத் தலைவர்களும் உருவாகியுள்ளனர். அது போல் விஸ்வேஸ்வரய்யா என்ற சிவில் என்ஜீனியரும் சர் சி.வி.ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர் உள்ளிட்ட இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மேதைகளும், ஸ்ரீனிவாச ராமானுஜம் எனும் கணித மேதையும் உருவாக்கியுள்ளனர். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்களே.

அது போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான் எத்திராஜ் கல்லூரி தலைவர் முரளிதரன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவர் சோம்சேகர், விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குநர் பி.எஸ்.வீரராகவன், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ஏ. முத்தையா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, காமெடியன் எழுத்தாளர் கிரேஸி மோகன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோரை உருவாக்கியுள்ளது.
இந்த அரசு நிறுவனங்களை தவிர்த்து தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. தமிழகத்தை சேர்ந்தோர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் சென்னைக்கு வந்து படிக்கிறார்கள். குறிப்பாக கேரளா,தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் கல்வி கற்கிறார்கள். சென்னையில் மாநில பாடப்பிரிவு முதல் சர்வதேச பாடப்பிரிவு வரை கற்பிக்கப்படுகின்றன. எனவே சென்னை தென்னிந்தியாவின் கல்வி மையம் என்றே சொல்லலாம்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications