கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழு! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை
சென்னை: கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மாணவர்கள் மோதலை தடுக்க ஆலோசனைகளை வழங்கும்படி, இரு கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், மாணவர்கள் அமைப்புகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் 231 மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை, உயர் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துள்ளதாகவும், நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன், பிரபல நீதிபதிகள் மாநிலக் கல்லூரியில் படித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி, புகழ்பெற்ற இந்த கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து வேதனை தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்ட நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கு ஏற்ப, மாணவர்கள் மோதல்களை தடுக்க நீண்டகால தீர்வாக, பள்ளிகளில் அடிக்கடி ஆசிரியர் பெற்றோர் கூட்டங்களை நடத்தி, மாணவர்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications