காஞ்சி கோவிலில் வடகலை, தென்கலை பஞ்சாயத்து... சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடும் அதிருப்தி
சென்னை: கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் பிரச்னை தொடர்பாக தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கில், வடகலை வைணவர்கள், காவல் துறை, கோவில் செயல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என, தென் கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, இரு தரப்பினரையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் சப் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சப் கலெக்டரின் உத்தரவால் இரு தரப்பினரும், பிரபந்தம் பாடுவதிலும், வேத பாராயணம் செய்வதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாவதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி மகாதேவன், கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை என்றார். மேலும் இவ்வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோவில் செயல் அதிகாரிக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications