குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு செல்லும் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு சென்று விடாமல் தடுக்க சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் 'லுக்அவுட் நோட்டீஸ்' பிறப்பிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வங்கி மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் வெளிநாடு சென்று விடாமல் தடுக்க சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் 'லுக்அவுட் நோட்டீஸ்' பிறப்பிப்பது வழக்கம். இதனால், தங்களால் தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை என்று மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்த தீர்ப்பில் கூறுகையில், "அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் விதமாக விடுமுறைக்காக, புனிதப் பயணத்துக்காக, தொழில் மேம்பாட்டுக்காக வெளிநாடு செல்லும், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கக்கூடாது.
அவர்களது வாழ்வுரிமையை பாதிக்காதவகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அதாவது இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டால், நாடு திரும்ப மாட்டார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்று நினைக்காமல், அவர்கள் மீண்டும் நாடு திரும்பும் வகையில் தங்களது நடவடிக்கைகளை புலன் விசாரணை அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம், ஒரு சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதால்தான், ஒவ்வொரு வழக்கிலும் புலன் விசாரணை அமைப்புகள் லுக்அவுட் நோட்டீசுகளை பிறப்பிக்கின்றன. இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்ல நேரிடும்போது, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கும்படி விசாரணை நீதிமன்றங்களை அணுகலாம்.
ஏன் என்றால், வாழ்க்கை, வெளிநாடு பயணம், தனிப்பட்ட சுதந்திரம் என்பது அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமை. அதனால், நிபந்தனைகளுடன் அவர்களை வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதிக்கலாம்.
எனவே, மனுதாரர்கள் தங்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் விசாரணை நீதிமன்றத்தில், வெளிநாட்டு பயண விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். அப்போது, அவர்கள் ரூ.10 லட்சத்துக்கு சொந்த உத்தரவாதமும், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதமும் கோர்ட்டில் அளிக்கவேண்டும். அந்த இருநபர்களில் ஒருவர் உறவினராக இருக்க வேண்டும். அந்த இருநபர்களும், மனுதாரர் குறித்த நாளில் நாடு திரும்புவார் என்று உத்தரவாதம் அளிக்கவேண்டும். அதுமட்டுமல்ல அந்த இருநபர்களில் ஒருவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும். குறைந்தது 2 முறையாவது வெளிநாடுகளுக்கு சென்று வந்திருக்க வேண்டும். அந்த தன்னுடைய பாஸ்போர்ட்டை மனுதாரர்கள் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மனுதாரர் சொன்னபடி திரும்பி வந்ததும், அந்த பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த நிபந்தனைகளுடன் மனுதாரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாம். அதற்காக அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள லுக்அவுட் நோட்டீசுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன்" இவ்வாறு சென்னை நீதிபதி என்.சேஷசாயி கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications