மயானத்திலும் தீண்டாமை.. கோவையில் அநீதி! மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சென்னை: பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்பு வேலிகளை உடனடியாக அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் பொது மயானத்தை பட்டியலின மக்கள் பயன்படுத்த குறிப்பிட்ட சாதியினர் அனுமதிப்பதில்லை என அக்கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சூரியகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு மனுவில், செஞ்சேரி கிராமத்தில் இறுதி சடங்குகளை செய்து கொள்ள 4 ஏக்கர் பரப்பில் பொது மயானம் உள்ளதாகவும், ஆனால் அந்த மயானத்தை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டியலின மக்கள் அந்த மயானத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, அருகில் உள்ள குளத்தில் இறுதி சடங்குகளை நடத்தி வருவதாகவும், மழைக்காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில், முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அந்த மயானத்தை பயன்படுத்தும் வகையில் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அப்பகுதி திட்ட வளர்ச்சி அதிகாரி இரும்பு வேலி அமைத்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், சூலூர் தாசில்தார், ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அசோக் ஆஜராகி பொது மயானத்தை பட்டியலின மக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தீண்டாமை இரும்பு வேலியை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்ச் 3 ம் தேதிக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை அகற்றி, அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மார்ச் 19 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர், சூலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications