சூர்யா படத்திற்காக கொண்டு செல்லப்பட்ட டம்மி ஆயுதம்! போலீஸ் தலையீட்டால் சர்ச்சை.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் போதுமானது என்றும் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் காரைக்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட போது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலீசார், படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிட்டு, உரிமம் வழங்கும் நடைமுறையை வகுத்துள்ளதாகவும், அதேபோல தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவதுடன், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென உத்தரவிட கோரி, தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டம்மி ஆயுதங்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், தங்கள் கிட்டங்கியை ஆய்வு செய்த காவல் துறை அதிகாரிகள், அவற்றுக்கு எண்ணிட்டனர். ஆனால், சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை காவல் ஆணையர் 2024 டிசம்பர் 20 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுத சட்டத்தின் அடிப்படையில் எந்த சான்றிதழும் வழங்க முடியாது எனக்கூறி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை ரத்து செய்து, சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கக் கோரி தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தங்கள் சங்கத்தினரும் தொழில் நடவடிக்கைகளில் தலையிட காவல் துறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், டம்மி ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே, உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்துள்ள நிபந்தனைகள் போதுமானது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications