கலைகளை வாழவைக்கும் கலைஞர்கள்.. விருது வழங்கி கெளரவித்த உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை: கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு முறையை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது தந்தை சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி கவுரவித்தார்.
பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஆத்மாலயா அகாடமி சார்பில் குருவே சரணம் என்ற பெயரில் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆள்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கானா சபா வளாக அரங்கில் நடைபெற்றது.

ஆத்மாலாயா அகாடமி நிர்வாகி டாக்டர்.பத்மஜா குழுவின் பரத நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவு விருதுகளை வழங்கினார்.
விழாவில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமனின் தந்தை மறைந்த சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி சிறப்பித்தார். ஆத்மாலாயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் வி .பத்மாவுக்கும், டாக்டர்.ராஜராம் சாஷ்திரி விருது வேத கலைஞர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஷ்திரிகளுக்கும், மேலத்துர் ஸ்ரீ எஸ்.நடராஜன் நினைவு விருது நடன கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேசுக்கும் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே. ஆர்.ஸ்ரீராம் கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு புனிதமானது என்றும் இதை எதிர்கால சந்ததியினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மாலாயா அகாடமி கலைஞர்கள், சாந்தாலா நாட்டியாலயா , ரமணா சென்டர் கலைஞர்கள் மற்றும் தர்ஷன்சங்கர், சர்வேஷ் வெங்கடேஷ் ஆகியோர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை நீதிபதி ஸ்ரீராமின் சகோதரி பரதநாட்டிய கலைஞர். டாக்டர்.பத்மஜா சுரேஷ் மேற்கொண்டு இருந்தார். சென்னை: கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு முறையை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது தந்தை சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி கவுரவித்தார்.
பெங்களுரை தலைமயிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஆத்மாலயா அகாடமி சார்பில் குருவே சரணம் என்ற பெயரில் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆள்வாட்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கானா சபா வளாக அரங்கில் நடைபெற்றது.
ஆத்மாலாயா அகாடமி நிர்வாகி டாக்டர்.பத்மஜா குழு வின் பரத நடன நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவு விருதுகளை வழங்கினார்.
விழாவில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமனின் தந்தை மறைந்த சாக்யா ராஜன் நினைவு விருதை பூஜா கொட்டு கலைஞர் ஸ்ரீ கிருஷ்ணா குரூப்க்கு வழங்கி சிறப்பித்தார். ஆத்மாலாயா சிறப்பு விருது மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் வி .பத்மாவுக்கும், டாக்டர்.ராஜராம் சாஷ்திரி விருது வேத கலைஞர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஷ்திரிகளுக்கும், மேலத்துர் ஸ்ரீ எஸ்.நடராஜன் நினைவு விருது நடன கலைஞர் ஸ்ரீ ஜெயராம் கணேசுக்கும் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே. ஆர்.ஸ்ரீராம் கலைஞர்கள் மூலமாகத்தான் கலை வாழ்வதாகவும், குரு சிஷ்யா உறவு புனிதமானது என்றும் இதை எதிர்கால சந்ததியினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்மாலாயா அகாடமி கலைஞர்கள், சாந்தாலா நாட்டியாலயா , ரமணா சென்டர் கலைஞர்கள் மற்றும் தர்ஷன்சங்கர், சர்வேஷ் வெங்கடேஷ் ஆகியோர் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை நீதிபதி ஸ்ரீராமின் சகோதரி பரதநாட்டிய கலைஞர். டாக்டர்.பத்மஜா சுரேஷ் மேற்கொண்டு இருந்தார்.

Click it and Unblock the Notifications