ஒருவழியாக ரிலீஸுக்கு ரெடியாகும் ‘துருவ நட்சத்திரம்’.. தேதி குறித்த சென்னை உயர் நீதிமன்றம்!
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இந்தப் படம் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் தாமதம் ஆனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, படத்தின் ரிலீஸை உறுதி செய்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 க்கு முன் வெளியிடலாம். இப்பட நிதி விவகாரங்களை கையாள தனியாக புதிய வங்கி கணக்கு திறக்கவும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23 ஆம், தேதிக்கு தள்ளி வைத்தார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீசுக்கு தடை கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. தயாரிப்பு தரப்பு மற்றும் கடன் வழங்கிய தரப்பினரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், படத்தை திரையரங்குகளில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படம், எந்தத் தடையுமின்றி ரசிகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் வாரங்களிலேயே படம் திரைக்கு வரும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விக்ரம் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications