கோயில் நிலத்தை மீட்க கோரி வழக்கு.. குட்டு வைத்த சென்னை ஐகோர்ட் அபராதமும் விதிப்பு! ஏன் தெரியுமா
சென்னை: தனிநபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கத் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க சுமார் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அதில் குறைந்தது 800 கோயில்கள் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என அறநிலையத்துறை கூறுகிறது.
மாநிலம் முழுவதும் பரவி உள்ள இந்த கோயில்களுக்குச் சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன. இவை தலைமுறை தலைமுறையாகக் கோயிலுக்கே சொந்தமானதாகவே இருந்து வருகிறது.

கோயில் நிலங்கள்
இருப்பினும், கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்களைக் காலப்போக்கில் தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. கோயில் நிலங்களை முறையாகப் பராமரித்தால் போதிய வருவாய் கிடைக்கும் என்றும் இருப்பினும், உரிய முறையில் பராமரிக்காததால் பெரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் பலரும் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்றங்களும் கூட கோயில் நிலங்களைக் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இதனிடையே கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். கடந்த 1971ஆம் ஆண்டு தனிநபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

கோயில் நிலங்கள்
ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கரியபெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு
1971ம் ஆண்டு இந்த நிலங்கள் தனியாருக்குப் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடராமல், பட்டா வழங்கியதை மறைமுகமாகச் செல்லாததாக்கும் வகையில், நீதிமன்றத்தின் அதிகார வரம்பைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை, 15 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்குச் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications