6 எம்எல்ஏக்கள் ராஜினாமா! கோர்ட்டுக்கு போன நபருக்கு ஒரு லட்சம் ஃபைன்! ஹைகோர்ட் விடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி ராஜினாமா செய்த 6 எம்எல்ஏக்களிடம் தேர்தல் செலவை வசூலிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். விளம்பரத்துக்காக தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அபராதத் தொகையை நான்கு வாரங்களில் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மே 25 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதிக்குள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன், தலைமைச் செயலகத்திலேய தவெக-வில் இணைந்துள்ளனர்.

High Court AIADMK tvk

இந்நிலையில், ராஜினாமா செய்த ஆறு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.காசி ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ராஜினாமா

அந்த மனுவில், ஆறு பேரும் கொள்கை ரீதியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. மாறாக, அமைச்சர் பதவி, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளிட்ட ஆதாயங்களுக்காகவும், தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்துவதால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினரின் மனித சக்தி வீணடிக்கப்பட உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்

சுயநலம், பேராசை கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களால் அரசுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள மத்திய அரசு புதிய விதிகளை வகுக்க வேண்டியது அவசியம். ஓராண்டுக்குள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தல் செலவை செலுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும். இடைத்தேர்தல் செலவு தொகையை செலுத்தும் வரை அவர்களை தேர்தலில் போட்டியிடவும், அரசு பதவி வகுக்கவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் செலவு

ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானதல்ல என அறிவித்து, இடைத்தேர்தல் செலவை தேர்தல் ஆணையத்துக்கு செலுத்த வேண்டும் எனவும், செலவுத்தொகையை செலுத்தும் வரை இடைத்தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் எச்சரிக்கை

அப்போது, இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை, தள்ளுபடி செய்து கடந்த 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து வழக்கில் வாதங்களை முன் வைக்க விரும்பினால் வழக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என, நீதிபதிகள் எச்சரித்தனர்.

அபராதத்துடன் தள்ளுபடி

இருப்பினும் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டதை அடுத்து, விளம்பரத்துக்காக தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அபராதத்தொகையை நான்கு வாரங்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அபராதத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+