ரேஷனில் அரிசி வாங்க போறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இந்த செய்தி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசிகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும் என்றும் ரேஷன் சார்பாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்பின் ரேஷனில் அரிசி ஆனாலும் சரி.. பருப்பு ஆனாலும் சரி.. சர்க்கரை ஆனாலும் சரி.. அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் அரிசிகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.
என்ன அறிவிப்பு: பொது வினியோக திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசின் விதிகளின்படி, தலசீமா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும் என எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும், அதுபோல எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி வினியோகிக்கப்படுவதாக கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சட்டவிதியின் படி உரிய எச்சரிக்கை வாசகங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், இதைப் பின்பற்றாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரிசி அடைக்கப்பட்டுள்ள கோணிப்பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோணிப்பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications