கமல்ஹாசன் பெயர், புகைப்படத்தை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை - உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்து, மக்களால் உலக நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அனுமதியின்றி தனது பெயர், குரல், படம், உலகநாயகன் பட்டம் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வர்த்தக ரீதியாக கமல்ஹாசன் பெயர், படத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசன் வழக்கு
இந்திய திரையுலகில் தனது அசாத்திய நடிப்புத் திறமையாலும், புதுப்புது சிந்தனைகளாலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். கடின உழைப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கமல்ஹாசன் தனது அனுமதியில்லாமல் தனது பெயர், புகைப்படம், பெயர், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வணிக ரீதியாக..
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்," திரையுலகில் தன்னைச் சுற்றி உருவான பிரபலத்தையும், அதனால் கிடைத்த அடையாளத்தையும் சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இது தனக்கு மட்டுமல்ல, தனது நற்பெயருக்கும், ரசிகர்களிடம் உருவாக்கிய நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' என்ற நிறுவனம், அவரது அனுமதி இன்றி அவரது புகைப்படம் மற்றும் திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை விற்பனை செய்து வருகிறது.
அனுமதிக்க கூடாது
இதுபோன்ற வணிக நடவடிக்கைகள், தன்னை ஒரு தயாரிப்பாக மாற்றும் முயற்சியாக இருப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது. தனது உருவம் அல்லது குரலை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வது, சட்டப்படி அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது பெயர், புகைப்படம், குரல் அல்லது 'உலகநாயகன்' என்ற பட்டத்தை வணிக நோக்கில் தவறாக பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்த வேண்டும். இதற்காக பொதுவான ஒரு தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலத் தடை
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், வர்த்தக ரீதியாக கமல்ஹாசன் பெயர் மற்றும் அவரது படத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்ட்டூன்களில் கமல்ஹாசன் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இதேபோன்று தங்கள் பெயர் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications