கடவுளை விட பெரிய ஆளா? கோயில் விழாக்களில் முதல் மரியாதை பழக்கத்தை நிறுத்தவேண்டும்: ஐகோர்ட் நீதிபதி
சென்னை: கோயில் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் விழாவில் தங்களுக்கு முதல் மரியாதை வழங்க கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தில் பந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மகா பெரிய குண்டம் விழாவில், கோயில் வழக்கப்படி எனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும். எங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும். அந்த வகையில் எனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல கோயில் விழாக்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான். கோயில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.
இது விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது. இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் எனக்கூறி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications