திடீர் மாரடைப்பு.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மரணம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவ வரிசையில் 43-வது இடத்தில் சத்திய நாராயணா உள்ளார். நீதிபதி சத்திய நாராயணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறாரக்ள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு சத்திய நாராயணா பதவி உயர்வு பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்திய நாராயணா நீதிபதிகளின் அனுபவர்கள் வரிசையில் 42-வது இடத்தில் இருந்தார்.
தஞ்சையை சேர்ந்த சத்திய நாராயண பிரசாத், 1997 ஆம் ஆண்டில் இருந்து 24 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக, பிஎஸ் என்.எல், சென்னை துறைமுகம் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் உயிரிழந்து இருக்க கூடிய தகவல் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications