சினிமா ஸ்டைல்.. கோவை ரவுடி போலீஸ் துப்பாக்கி சூடு.. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, "தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது" எனக் கூறினார்.
சென்னை: கோவையில் ரவுடி மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் சத்தி பாண்டி. பிரபல ரவுடியான இவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாணையில், கோவையை சேர்ந்த மற்றொரு சஞ்சய் ராஜாதான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சய் ராஜாவை போலீஸார் தேடி வந்த நிலையில், அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கி சஞ்சய் ராஜா சுட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக ரேஸ்கோர்ஸ் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார். இதில் காயமடைந்த சஞ்சய்ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்ப ராஜ், கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளதாகவும், அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்பதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறினார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி அதற்கான புகைப்படத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, "தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது" எனக் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து காவல்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications