அனைத்து ஆவணங்களிலும் தாய் பெயரை குறிப்பிட கோரிய வழக்கு.. பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களில் தாயின் பெயரைக் குறிப்பிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள், கல்வி ஆவணங்கள், சாதிச் சான்இருப்பிட சான்று ,சாறு, வருமான சான்று மற்றும் பூர்வீக சான்று பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

Madras high court ordered Tamil Nadu govt to respond to make mothers name in all documents compulsory

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்கள் கோர முடியாது என்றும் நாட்டை தாய்நாடு மற்றும் மொழியைத் தாய்மொழி, நதியைப் பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசுத் துறை ஆவணங்களில், சான்றிதழ்களின் விண்ணப்பங்களில் தாய் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரியத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+