இளம் வழக்கறிஞர்களுக்கு இனி மாதாமாதம் ரூ.20,000 உதவித்தொகை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: வழக்கறிஞர்களிடம் ஜூனியர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஒருசில தொழில்களில் ஊதியம் என்பது குறைந்தபட்சம் கூட கிடைக்கப்படாத நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. இப்படியான தொழில்களில் முதன்மையானது வழக்கறிஞர் தொழில். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு உதவிக்கான இளம் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் ஏதும் தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

இந்நிலையில் உதவியாளர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மற்றும் மதுரையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.15,000 வழங்கப்பட வேண்டும் என்றும் உதவித்தொகை வழங்குவதில் பாலின அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் இன்ன பிற பிரச்னைகள் இந்த தொழிலின் ஓர் அங்கம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. இளம் வழக்கறிஞர்கள் இதற்கு பழகிவிட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமல்ல. இழிவான சிந்தனையாகும். இளம் வழக்கறிஞர்கள் எதற்கும் பழக வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கற்றல் மற்றும் தொழிலில் வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழ்நிலையை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இளம் வழக்கறிஞர்களுக்கான உதவி தொகை குறித்து நீதிமன்றமே தலையீடு செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications