"நிம்மதி.." ஐ.பெரியசாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.. சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
போராட்டங்கள்: போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் கைகொடுக்கவில்லை. பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இறுதியில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஐ பெரியசாமி: அப்படி தான் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019ம் ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ரத்து: இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இதுவரை 5500 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் திங்கள்கிழமை மத்திய அரசு இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது. இதன் மூலம் அண்டை நாடுகளில் இருந்து வந்த மத ரீதியான சிறுபான்மையினர் இந்தியாவில் 6 ஆண்டுகள் இருந்தால் குடியுரிமை பெற முடியும். இதற்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது.
ஒன் இந்தியா தளத்தில் இது தொடர்பாக வெளியாகியுள்ள பிற செய்திகள்
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், ஜெயினர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற முடியும். இருப்பினும், இதில் சில ரூல்ஸ்களும். சில விதி விலக்குகளும் உள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நடிகர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலில் இந்த சட்டம் குறித்து படிக்கவும்.. அதன் பிறகு இதை எதிர்காலம் என்ரு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மாதுவா சமூகத்தை சேர்ந்த அகதிகளுக்கு இதன் மூலம் குடியுரிமை கிடைக்கும்.. இதனால் அங்கு நமது நாட்டின் மாதுவா மக்கள் எளிதாக பாஜக பக்கம் சாயலாம். இது மேற்கு வங்க தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய விஷயமாக கூட மாறலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications