"கோவை என்ன பாகிஸ்தானில் உள்ளதா? பாஜக பேரணி விவகாரத்தில் போலீசுக்கு குட்டு வைத்த சென்னை ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏந்தியபடி பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக காவல்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேசிய கொடியை ஏந்தி பேரணி செல்வது என்ன பாவச் செயலா என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், பாஜக பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது.

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த பாஜக அனுமதி கோரியது. ஆனால், காவல்துறை அதற்கான அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ. ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

Chennai high court BJP

போலீஸ் விளக்கம்

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, பேரணி செல்ல கோரப்பட்ட பாதை பிரதான சாலையாக இருப்பதாகவும் அப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அதிகம் இருப்பதாகவும் கூறினார். எனவே, அந்த வழித்தடத்தில் பேரணி நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் கூறினார். மேலும், கோவையில் போலீசார் அனுமதி வழங்கக்கூடிய 12 மாற்று இடங்களில் பேரணி நடத்தலாம் என்றும், தேசியக் கொடியை ஏந்துவதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சரமாரி கேள்வி

இருப்பினும், இதை ஏற்க மறுத்த நீதிபதி, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது நீதிபதி, "தேசிய கொடியை ஏந்தியதற்காக உயிர்நீத்த திருப்பூர் குமரன் வாழ்ந்த நாட்டில், தேசிய கொடியை ஏந்தி செல்ல தடை விதிப்பதா? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச்செயலா?

பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா.. இல்லை ஆப்கானிஸ்தானிலா உள்ளது.. திமுகவுக்கு பேரணி நடத்த அனுமதி கிடையாது, பாஜகவுக்கும் அனுமதி கிடையாது.. அப்படியென்றால் தவெகவுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறீர்களா?" எனவும் போலீசாரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

ஏற்க மறுப்பு

இதற்கு பதிலளித்த போலீஸ் தரப்பு வழக்கறிஞர், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேரணி நடத்த மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். காரணமின்றி பாஜகவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும் மாற்று வழித்தடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த நீதிபதி, "சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி தேசியக் கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அவர் மேலும், "நாட்டின் எந்த பகுதியிலும் தேசிய கொடியை ஏந்தி செல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரியானதாக இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை போல மாவட்ட ஆட்சியர் செயல்படக்கூடாது" என்றார். மாற்று இடங்களில் பேரணி நடத்துவது தொடர்பாக போலீசாருடன் ஆலோசித்து தகவல் தெரிவிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அனுமதி

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஏஆர்சி சந்திப்பில் தொடங்கி, வடக்கு கோவையில் உள்ள சிந்தாமணி சந்திப்பு வரை பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி லட்சுமி நாராயணன், "தேசியக் கொடியை ஏந்தியபடி பாஜக பேரணி நடத்த போலீசார் வழக்கமான சட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணி நடத்த யார் அனுமதி கோரினாலும், காரணமில்லாமல் அதற்கு அனுமதி மறுக்கக்கூடாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+