விழுப்புரம் கோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்ட ராஜேஸ்தாஸ்.. சென்னை ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொலை அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்பு தேதி அறிவித்த நிலையில், பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கில் தீர்ப்பு தேதி அறிவித்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜேஸ்தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 9ம் தேதி தாக்கல் செய்த மெமோவில், வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அதனை பரீசிலிக்காமல், நீதிபதி இன்று தீர்ப்பை பிறப்பித்து உள்ளதாக வாதிட்டார்.
எனவே விழுப்புரம் நீதிமன்றம் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்தார். மனு தள்ளுபடி என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விரிவான தீர்ப்பை அறிவிக்காததால் ஆவணங்களை வரவழைத்து சரிபார்க்க வேண்டுமென வாதிட்டார்.
ஆனால், விழுப்புரம் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வுசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தன் மீதான வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனிடையே பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications