அரசு நடவடிக்கையை எதிர்த்து அவசரமாக ஹைகோர்ட் போன ஊட்டி ரேஸ் கிளப் நிர்வாகம்.. நீதிபதி உத்தரவு என்ன?
சென்னை: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், 820 கோடி ரூபாய் வரை குத்தகை நிலுவையில் உள்ள நிலையில் அரசின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்றும், நிலம் கையப்படுத்தப்பட்டு விட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
உதகையில் வருவாய்துறைக்கு சொந்தமான 52.34 ஏக்கர் நிலத்தை 1977 ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் மைதானமாக பயன்படுத்தி வந்தது. தொடக்கத்தில் முறையாக குத்தகை செலுத்தி வந்த ரேஸ் கிளப் நிர்வாகம், பின்னர் குத்தகை தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2001 ஆம் ஆண்டு முதல் குத்தகை தொகை செலுத்தாமல் வந்தது.

கடந்த 23 ஆண்டுகளில் ரேஸ் கிளப் நிர்வாகம் ரூ. 820 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க உயர்நீமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ரேஸ் கிளப் நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு, ரேஸ் கிளப் சார்பாக தாக்கல் செய்யபட்டிருந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று காலை உதகை கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் குதிரை பந்தயம் மைதானத்தை மீட்டனர். அங்கு அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, தோட்டக்கலைத் துறைக்கு அந்த நிலத்தை ஒப்படைத்தனர்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று காலை அவசர முறையீடு செய்தது. கையகப்படுத்திய நடவடிக்கை தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 820 கோடி ரூபாய் வரை குத்தகை நிலுவையில் உள்ள நிலையில் அரசின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்றும், நிலம் கையப்படுத்தப்பட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து நீதிபதிகள் ரேஸ் கிளப் நிர்வாகத்தின் முறையீட்டை நிராகரித்து உத்தரவிட்டனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications