"கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும்.. அதை அகற்ற உத்தரவிடுவோம்!" சென்னை ஐகோர்ட் பரபர கருத்து
சென்னை: பொது இடத்தை ஆக்கிமித்து கட்டப்பட்ட கோயில் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்குச் செல்லும் வழியைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஆக்கிரமிப்பு
அந்த வழக்கை விசாரணை செய்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோவிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தனது தீர்பு வழங்கினார். குறிப்பிட்ட பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார். அதேபோல பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு
பொது சாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோவிலாக இருந்தாலும், அதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோயில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு
மேலும், கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களைக் கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications