ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் மீதான குண்டாஸை ரத்து செய்யக்கோரி மனு.. ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருந்தார். பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

armstrong police high court

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஸ்வத்தாமனின் தாய் விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது குறித்து தனக்கோ, அவரது மனைவிக்கோ தெரிவிக்கவில்லை எனவும், உரிய காலத்தில் இந்த உத்தரவு மற்றும் ஆவணங்கள் அஸ்வத்தாமனிடம் உரிய நேரத்தில் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி கிளைச் சிறையில் அஸ்வத்தாமன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புழல் சிறைக்கு இந்த உத்தரவை அனுப்பியது முறையற்றது எனவும், பொது அமைதிக்கு எந்த பங்கமும் விளைவிக்காத தனது மகன் அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த அளித்த மனுவை அறிவுரைக் கழகம் முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்துக்கு பின்னணியாக இருந்தவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், தேசிய கட்சியில் நிர்வாகியாக இருந்த தனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக அதாவது ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ2 குற்றவாளியாக, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ 3 குற்றவாளியாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பெயரை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+