7.. பொதுநல வழக்கு போட்டவருக்கு.. நேர்மையை நிரூபியுங்க.. சென்னை ஐகோர்ட் விசித்திரமான உத்தரவு
சென்னை: கோயில்கள் தொடர்பான 7 பொதுநல வழக்குகள் தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மனின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பொதுநல வழக்குகள் யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். மாநில அளவிலானது என்றால் பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் உயர்நீதிமன்றம் இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள பகுதி மக்கள் மதுரையிலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ளவர்கள் சென்னையிலும் வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.

சென்னை மற்றும் மதுரை இரண்டில் எங்கு வேண்டுமானாலும் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய முடியும். பொதுநல வழக்குகள் விசாரணைக்கு உகந்தது என்றால் நீதிபதிகள் விசாரிப்பார்கள். இல்லாவிட்டால் தள்ளுபடி செய்வார்கள்.
சில வழக்குகள் வீணான அவசியமற்றதாக இருந்தாலோ, அல்லது நீதிமன்றத்தில் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருந்தாலோ அல்லது விளம்பர நோக்கில் இருந்தாலோ, வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும்.
அண்மையில் அரிகொம்பன் யானையை கேரளாவிற்கு இடமாற்றம் செய்யக்கோரிய வழக்கை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட பொதுநல வழக்குகள் பல அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோவிகளிலும் பக்தர் தான் என பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
வழக்குகளின் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கபடும் எனவும், இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படுன் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்திய பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
-
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications