அடுத்த தலைமுறை எப்படி உருப்படும்.. செல்லூர் ராஜூ வழக்கில் திமுக அதிமுகவை கடுமையாக விமர்சித்த ஹைகோர்ட்
சென்னை: ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை என்றும் இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செல்லூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும் தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் செல்லூர் ராஜு தரப்பில் வாதிடப்பட்டது
ஆனால் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செல்லூர் ராஜு பேசியுள்ளதால் அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது
மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி வேல்முருகன், திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் சாதனை மட்டும் சொல்லக்கூடிய அளவில் இரு கட்சிகளும் இல்லை என்றும் இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூறு இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவதை இன்றைய நிலையாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்











Click it and Unblock the Notifications