எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடி.. சசிகலாவின் அப்பீலை வரும் 30ம் தேதி விசாரிக்கிறது சென்னை நீதிமன்றம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி பறித்ததாக சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வருகிற 30 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா சிறைக்கு சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடிபழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சசிகலாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை ஓ பன்னீர் செல்வம் தரப்பு எதிர்பார்த்து உள்ள நிலையில், சசிகலா மனுவை வரும் 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications