குண்டு குண்டு குலாப் ஜாமுனுடன் கழுதைக்கு கல்யாணம்.. தவளைச் சத்தம் கேட்டுச்சா? நிஜமாகவே மழை வருமா?
சென்னை: வழக்கமாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவார்கள்.. அல்லது புலி கணக்கெடுப்பு நடத்துவார்கள்.. ஆனால், தவளை கணக்கெடுப்பு கேள்விப்பட்டீர்களா?
வனத்துறையினரும், இயற்கை ஆர்வலர்களும், விலங்குகள், உயிரினங்கள் மீது அளவுகடந்த பிரியத்தை வைத்திருப்பவர்கள்.. இதற்காகவே ப்ளூ கிராஸ் என்ற ஒரு அமைப்பு இயங்கி வந்தாலும், உயிரினங்கள் வதையை தடுத்து நிறுத்த பல்வேறு விழிப்புணர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தவளைகளுக்கும் இயற்கை ஆர்வலர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.. உயிரியல் கண்காணிப்பாளர்களாக உள்ள இந்த தவளைகள், பூச்சிக் கட்டுப்பாட்டாளர்களாகவும் செயல்படுகின்றன...
எனினும், அவற்றின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.. சில இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டது என்கிறார்கள்.. இந்நிலையில், சென்னையை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தவளை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்...
மேலும், தவளைகளின் கூக்குரல்களை காது கொடுத்து கண்காணிக்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.. மெட்ராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் அதாவது எம்.என்.எஸ். என்று இதற்கு பெயர்.. சென்னையை தளமாக கொண்டு 44 வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.. இவர்கள்தான இதற்கான முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள்.. இதுகுறித்து எம்என்எஸ் கவுரவ செயலாளர் விஜய் குமார் சொல்லும்போது, தவளைகளின் குணாதிசயங்களை விளக்க சொல்கிறார்.
"தவளைகள் நீரியல் ஆரோக்கியம் மற்றும் வாழ்விடத் தரத்தின் அதிக உணர்திறன் கொண்ட உயிர் குறிகாட்டிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன... இவை வேட்டையாடப்படும் இரையாக இருப்பதால், அவை இல்லாதது முழு சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மாற்றிவிடும்.. தவளைகளின் இருப்பு, இல்லாமை மற்றும் நமது சுற்றுப்புறங்களில் அவற்றின் நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் வாழிடங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பெற இந்த கணக்கெடுப்பு உதவும்" என்றார்.
எனவே, இந்த மாதமும், அடுத்த மாதமும் தவளைகளின் சத்தம் கேட்டால், அவற்றை போட்டோ எடுத்து அனுப்புமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.. ஆனால் பழைய தரவுகளை பதிவேற்றுவதை தவிர்க்குமாறும் இந்த சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.. அதுமட்டுமல்ல, தவளைகளின் இருப்பு, இல்லாமை, அவைகளின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றை நன்றாக புரிந்து கொள்ள உதவும், பல்வேறு தகவல்களையும் அவைகளின் மூலம் அறிய விரும்புவதாக இச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications