வெங்காய மண்டி காதலனுக்காக ஏரிக்கரைக்கு ஓடிய மதுரை தனலட்சுமி! ஒரு நிமிடத்தில் தலைகீழாக மாறிய வாழ்க்கை
சென்னை: மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் நடந்த அந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.. பெற்ற தாயே தன் பிஞ்சு பிள்ளையை எமனாக மாறி கண்மாயில் வீசிய கோர சம்பவம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.. கள்ளக்காதல் மோகத்தால் ஒரு உயிர் பறிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களை பாருங்கள்..!!
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் தனலட்சுமி.. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவருக்கும் கடந்த 2 வருஷங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.. இவர்களுக்கு சுபாஷினி என்ற ஒன்றரை வயதுப் பெண் குழந்தை உள்ளது..

சென்னை குன்றத்தூர் டூ மதுரை
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், நாளடைவில் கசப்பு தட்டியது.. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு வெடித்தது.. இதனால் கணவரை பிரிந்த தனலட்சுமி, தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் மதுரையில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்..
அங்கு தன்னுடைய அப்பாவின் கூழ் கடையில் வியாபாரத்தில் உதவி செய்து வந்தார்.. அப்போதுதான் தனலட்சுமிக்கு, வெங்காய மண்டியில் வேலை பார்த்து வந்த பூதக்குடியைச் சேர்ந்த 19 வயதான அழகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது..
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.. ஆனால், அழகரின் குடும்பத்தினர் ஒரு விபரீதமான கண்டிஷனை போட்டார்கள்.. "குழந்தை இல்லாமல் வந்தால்தான் திருமணம்" என்று கறாராக சொல்லிவிட்டதாக தெரிகிறது..
தனலட்சுமியின் கோர முகம்
இதைக்கேட்டு கொஞ்சமும் அதிர்ச்சியடையாத தனலட்சுமி, தனது திருமண வாழ்விற்கு தடையாக இருப்பது குழந்தைதான் என்பதால், அந்த குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தார்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு குருந்தங்குளம் அருகே உள்ள பேச்சிக்குளம் கண்மாய்க்கு தனது குழந்தையை தூக்கி சென்ற தனலட்சுமி, சுற்றுமுற்றும் பார்த்தார்.. அங்கே யாரும் இல்லாத நேரத்தில், தான் பெற்றெடுத்த ஒன்றரை வயதுக் குழந்தை சுபாஷினியை உயிரோடு கண்மாயில் வீசினார்.. தண்ணீரில் தத்தளித்த அந்த பிஞ்சு உயிர், மூச்சுத் திணறியே பரிதாபமாகப் பிரிந்தது..
கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில்
பிறகு கேஷூவலாக வீட்டிற்கு திரும்பிய தனலட்சுமியிடம், குழந்தை எங்கே? என்று அவரது அப்பா கேட்டுள்ளார்.. அதற்கு முன்னுக்குப் பின் முரணாக தனலட்சுமி பதிலளித்துள்ளார்.. இதனால் சந்தேகமடைந்த அப்பா, மீண்டும் மீண்டும் மகளிடம் குழந்தையை பற்றி கேட்டார்.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேருவதற்காக குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்..
இந்த தகவலறிந்த ஊமச்சிகுளம் போலீசார் விரைந்து வந்து தனலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் அழகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.. இந்த சம்பவம் மதுரையை உலுக்கி எடுத்து வருகிறது.
குன்றத்தூர் அபிராமிகள்
ஏற்கனவே குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. அவர் கடுங்காவல் தண்டனை பெற்று இன்றும் சிறையில் இருக்கிறார்.. ஆனாலும் சமூகத்தில் இது போன்ற அபிராமிகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பது வேதனையான விஷயம்.. இதற்குத் தீர்வு என்பது சட்ட ரீதியான தண்டனைகள் மட்டுமல்ல, சமூக ரீதியான மாற்றமும் அவசியமாகிறது..
முதலாவதாக, இளவயது திருமணங்கள் மற்றும் அவசரக் காதல் முடிவுகள் பெரும்பாலும் முதிர்ச்சியின்றி எடுக்கப்படுகின்றன.. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், ஒரு செயலின் விளைவுகளை யோசிக்கும் மனப்பக்குவம் வளர்க்கப்பட வேண்டும்.. அதேபோல, குடும்ப உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும்போது முறையான கவுன்சிலிங் பெறுவதும் அவசியம்..
அதேபோல கள்ளக்காதல் விவகாரங்களில் குழந்தைகளை பலியாக்கும் குற்றவாளிகளுக்குச் சட்டம் மிகக் கடுமையான மற்றும் விரைவான தண்டனையை வழங்க வேண்டும்.. இது போன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அந்தத் தண்டனை ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, அறநெறிகளும் மனித நேயமும் கொண்ட வளர்ப்பு முறை இன்றைய தலைமுறைக்கு அவசியமாகிறது..!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications