சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆடியோ விவகாரம் 15 நாட்களுக்கு முன்பே தெரிந்து மறைத்தார்.. அண்ணாமலை மீது போலீஸில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில நிர்வாகியின் ஆடியோ விவகாரத்தில் குற்றத்தை மறைத்த அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

மதுரை கே கே நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இவர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்கள், ஊடகங்களில் பாஜக தமிழக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா என்பவர் சிறுபான்மை அணித் தலைவர் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது.

என்ன நடக்கிறது அண்ணாமலை தலைமையிலான பாஜகவில்..? திசைக்கொரு கோஷ்டி.. தினம் தினம் ஒரு சர்ச்சை! என்ன நடக்கிறது அண்ணாமலை தலைமையிலான பாஜகவில்..? திசைக்கொரு கோஷ்டி.. தினம் தினம் ஒரு சர்ச்சை!

 டெய்சி சரண்

டெய்சி சரண்

சூர்யா சிவா டெய்சி சரணை சங்கை அறுத்து சம்பவம் செய்திடுவேன்ய எனது சாதிக்காரனை ஏவி விட்டு கொன்றுவிடுவோன். நாங்கள் 68 சதவீதம் இருக்கிறோம் உள்ளிட்ட ஆபாச வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். மேலும் அக்கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், அண்ணாமலை, ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

ஆடியோ பிரதி

ஆடியோ பிரதி

மேற்படி ஆடியோவின் பிரதியை இப்புகாருடன் இணைத்துள்ளேன். இது குறித்து டெய்சி சரண் கூறுகையில், ஏற்கெனவே 15 நாட்களுக்கு முன்பே இந்த கொலை மிரட்டல் ஆடியோ குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என அவர் கடந்து சென்றிருக்கிறார். சூர்யா சிவா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி தண்டனைக்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீர்குலைக்க வன்முறை

சீர்குலைக்க வன்முறை

ஓபிசி சமூகத்தை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவிவிடுவேன் என சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன் பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டியிருக்கிறார். பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டிருக்கிறார். அவர் பெண்களை கேவலமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை குற்ற சம்பவத்திற்கு புகார் கொடுக்காதது மற்றும் புகார் கொடுக்க சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச்செயல், அவர் குற்றம் இழைத்துள்ளார்.

பாஜகவில் குற்றம்

பாஜகவில் குற்றம்

பாஜகவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடருகிறது. குறிப்பாக கே.டி.ராகவன் பிரச்சனை, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது பொது இடத்தில் பாலியல் வன்முறை நடந்துள்ளது. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட சூர்யா சிவாவின் குற்றத்தை தெரிந்தே மறைத்த அண்ணாமலை மற்றும் சூர்யா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Madurai Advocate gives complaint against Tamilnadu BJP President Annamalai in Trichy Suriya Siva's derrogatory audio on woman activist Daisy Saran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X