Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாறும் மதுரை..கலெக்டர் ஆபிசில் கழிவு நீர் ஆறு..வாக்குறுதியை நிறைவேற்றுங்க - எடப்பாடி பழனிச்சாமி

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த தூய்மை பணியாளர்களுக்காண ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலயே கழிவு நீர் ஆறுபோல ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார் . திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த தூய்மை பணியாளர்களுக்காண ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் அவை மலை போல் குவிந்து காணப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது, இதில் 10,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகையாக 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தப்போராட்டம்

வேலை நிறுத்தப்போராட்டம்

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைகள் தோல்வி

பேச்சுவார்த்தைகள் தோல்வி

ஏற்கனவே, வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக, கடந்த 24 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் பேச்சு வார்தையானது நடைபெற்றது. எனவே முதல்கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.

28 அம்ச சோரிக்கைகள்

28 அம்ச சோரிக்கைகள்

2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையானது கடந்த 25 ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவிடம் நடைபெற்றது. அதுவும் தோல்வியில் முடிந்தததால் 3 ஆம் கட்ட பேச்சு வார்தையானது கடந்த 28 ஆம் தேதி மேயர் இந்திராணியிடம் நடைபெற்ற நிலையிலும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்தால், திட்டமிட்டபடி தற்போது தங்களுடைய 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மதுரை மாநகரமே குப்பை நகரமாக மாறியுள்ளது.

டன் கணக்கில் குப்பைகள்

டன் கணக்கில் குப்பைகள்

நேற்றைய தினம் மாநகராட்சி ஆணையாளர் போராட்டக்குழுவிடம் நான்காம் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது, சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மதுரை மாநகராட்சியில் அவர்கள் பயன்படுத்தி கொட்டப்படும் 1700 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி அப்படியே கிடக்கின்றது.

ஆறாக ஓடும் கழிவு நீர்

ஆறாக ஓடும் கழிவு நீர்


இதனால் மக்கள் கூடும் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கி ஆறாக ஓடுகிறது. குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பரங்குன்றம், தெற்குவாசல் ஆகிய காய்கறி மார்கெட்டில் இருந்து கொட்டப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. மேலும், அனைத்து வீடுகளின் வாசல்களிலும் குப்பை வாலிகள் வைக்கப்பட்டு, அகற்றப்படாமல் காத்துகிடக்கின்றன. ஒரு பக்கம் குப்பை மேடாகவும், மறுபக்கம் கழிவு நீர் தேங்கி மதுரையே தூர்நாற்றம் வீசுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்

எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை கவுன்சிலர்கள் வேலை சொல்லி மிரட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4500க்கும் மேற்பட்ட மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த தூய்மை பணியாளர்களுக்காண ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலயே கழிவு நீர் ஆறுபோல ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் நிர்வாக தோல்வியடைந்து விட்ட இந்த விடியா அரசு உடனடியாக மதுரை தூய்மை பணியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் துயரை போக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+