அமைச்சர் பி.டி.ஆர். வீட்டில் கோ.தளபதி! மொத்தமாக வந்த மதுரை மாநகர திமுக நிர்வாகிகள்! என்ன பின்னணி?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை மாநகர திமுக நிர்வாகிகள்.
சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி வீடு தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து கூறியிருப்பது தான் மதுரை திமுக நிர்வாகிகளிடையே பேசு பொருளாக உள்ளது.
அமைச்சர் பி.டி.ஆருக்கும் கோ.தளபதிக்கும் லோக்கல் அரசியலில் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.
இந்தச் சூழலில் வாண்டடாக விரும்பி வந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது சென்னை வீட்டில் கோ.தளபதி சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்ததற்காக வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

தமிழக பட்ஜெட்
நேற்று முன் தினம் சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய வண்ணம் உள்ளனர். அந்தவகையில் மதுரை மாநகர மாவட்ட திமுக நிர்வாகிகளும் சென்னைக்கு புறப்பட்டு வந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிடிஆர் -கோ.தளபதி
வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிவேல் தியாகராஜனை சந்தித்ததெல்லாம் புதிய கதை அல்ல. லோக்கல் அரசியலில் பி.டி.ஆரோடு முரண்பட்டுள்ள மதுரை மாநகர மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி நேரில் சந்தித்து வேட்டியை பரிசளித்து பட்ஜெட் தாக்கலை பாராட்டி வாழ்த்துக் கூறியிருப்பது தான் புதிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. கோ.தளபதியிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மதுரை திமுக நிர்வாகிகளிடையே பேசு பொருளாக உள்ளது.

அமைச்சர் உற்சாகம்
தாம் தாக்கல் செய்த பட்ஜெட்டை பாராட்டி எத்தனையோ பேர் தனக்கு வாழ்த்துச் சொன்னாலும் கூட, மண்ணின் மைந்தர்களான மதுரை திமுக நிர்வாகிகள் தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்து சென்றது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரொம்பவே உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இதனிடையே சென்னைக்கு செல்ல முடியாத மதுரை மாநகர திமுக நிர்வாகிகள் சனி, ஞயிற்றுக்கிழமைகளில் மதுரையில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.

வழக்கமான நடவடிக்கை
மானியக்கோரிக்கை மீதான விவாதங்களின் போது எந்தெந்த துறைகள் எந்தெந்த தேதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளதோ அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து அவர்களது ஆதரவாளர்கள் வாழ்த்துக் கூறும் நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications