மறைந்த மதுரை பெண் மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது..... சண்முகப்பிரியா செய்த தியாகம் என்ன?
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லாவின் விருது அறிவிக்கப்பட்டு அதை அவரது கணவர் பெற்றுக் கொண்டார். துணிச்சலான மருத்துவ சேவைக்கா இந்த விருது வழங்கப்பட்டது. யார் இந்த சண்முகப்பிரியா?
நாடு முழுவதும் கொரோன 2ஆவது அலை கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதனால் தினந்தோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் என கொரோனாவுக்கு பலர் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையில் தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஊசியை செலுத்த மக்களுக்கு தொடர்ந்து தயக்கம் ஏற்பட்டிருந்தது.

முன் கள பணியாளர்கள்
கொரோனா முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்தப்பட்டாலும் அந்த ஊசியை கர்ப்பிணிகளுக்கு செலுத்தக் கூடாது என அரசு அறிவித்திருந்தது. இதனால் முன்கள பணியாளர்களில் பல கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை. தங்கள் உயிரை பணயம் வைத்து பலரது உயிரை காத்தவர்களில் முக்கியமானவர் மதுரை டாக்டர் சண்முகப்பிரியா.

சுகாதார நிலையம்
மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.

இடைவிடாமல் பணி
தமிழகத்தில் கொரோனா தொடங்கிய நாள் முதல் இடைவிடாமல் பணியாற்றி வந்தார். 8 மாத கர்ப்பிணியான இவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி பலர் வலியுறுத்தியும் இவர் கொரோனா தடுப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே அவர் மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தார்.

90 சதவீதம் நுரையீரல் தொற்று
இதையடுத்து 90 சதவீத்ம நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அவர் ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த மே 4 ஆம் தேதி உயிரிழந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் தன்னை பற்றி கவலைப்படாமல் சண்முகப்பிரியா ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளதால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டது.

கொரோனா பணிகள்
இந்த நிலையில்தான் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொரோனா பணிகளில் இருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு அளித்தது. சுதந்திர தின விழாவில் விருது வழங்குவோர் பட்டியலில் சண்முகப்பிரியாவின் பெயரும் அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் பலதரப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
Recommended Video

கல்பனா சாவ்லா விருது
அந்த வகையில் சண்முகப்பிரியாவின் வீர, தீர, துணிச்சலான, தன்னலமற்ற சேவைக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இதை அவருடைய கணவர் சண்முக பெருமாள் பெற்று கொண்டார். கொரோனா தொடங்கிய நாள் முதல் இடைவிடாமல் பணியாற்றி உயிர் நீத்த சண்முகப்பிரியாவுக்கு விருது கிடைத்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பாராட்டுகளும் அவர் குறித்த நினைவுகளும் குவிகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications