5 லட்சம் பேர் டார்க்கெட்! அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் எடப்பாடி போட்ட உத்தரவு! பரபர தகவல்
சென்னை: சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் அதிமுகவை பலப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார்.
குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் தென்மாவட்டங்களில் செல்வாக்கான தலைவராக பார்க்கப்படுகிறார். இதனால் அங்கு தனது செல்வாக்கை உயர்த்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக தான் மதுரையில் ஆகஸ்ட் 20ல் அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகயை சூழலில் கடந்த மாதம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த மாநாடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி சில அறிவுரைகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகளுக்கு அதுதொடர்பாக முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 லட்சம் பேரை திரட்ட முயற்சிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுகவின் பலத்தை இந்த மாநாட்டில் பிற கட்சிகளுக்கு காட்ட வேண்டும். இதனால் அனைவரும் மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து வர வேண்டும். அதற்கான வாகன ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications