சுண்டு விரல் காயத்தை விடுங்க.. இதய துடிப்பை சரி பண்ணுங்க.. இது இப்ப முக்கியமா? சு.வெங்கடேசன் ஒரே போடு
டெல்லி: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் ஒருபக்கம், இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் மறுபக்கம், இதற்கு நடுவில் மிமிக்ரி சம்பவம் மறுபக்கம் என டெல்லியே அனலடித்து வருகிறது. இந்நிலையில், மதுரை எம்பி வெங்கடேசனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் 2 நபர்கள் உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த நபர்களை மக்களவையிலிருந்த எம்பிக்களே மடக்கி பிடித்துவிட்டனர் என்றாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி வருகிறார்கள். தற்போது, அவை நடந்துவருவதால், அமளியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்..
அத்துமீறல்: நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் அவை நடவடிக்கைகள் மொத்தமாகவே முடங்கியுள்ளன.
எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சொல்லி, எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. இதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் உட்கார்ந்தபடி ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்தபோது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார்.
வீடியோ : முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர், ராகுலை பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா? என்பது பற்றி தன்கரை போலவே நடித்தும் காட்டினார். உடனே இதைப்பார்த்த சக எம்பிக்கள், கைதட்டி சிரித்தனர்.. இதை ராகுலும் தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.
இதையடுத்து, ஜனாதிபதி அலுவலக எக்ஸ் தள பதிவில், "நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம்.
கண்ணியம்: ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று கண்டனம் தெரிவித்தது.
இந்த கண்டனத்துக்கும் பதிலடி வந்து விழுந்து கொண்டிருக்கிறது.. "மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு ஆகிய விஷயங்களின் போது வாய் திறக்கவில்லை. மிமிக்ரி சம்பவத்திற்கு ட்வீட் வருகிறது. எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார் பாருங்கள் என்று மஹுவா மொய்த்ரா" கண்டனம் தெரிவித்திருந்தார்.
சுண்டுவிரல்: இந்நிலையில், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட இந்த பதிவுக்கு, மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவ:
"மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே! 144 எம்பிக்களின் சஸ்பெண்ட் பற்றிய உங்கள் கருத்தும் அறிவுரையுமே இன்று தேசத்தின் தேவை. எதிர்க் குரலே இல்லாத நாடாளுமன்றம் தன் ஜீவனை இழக்கிறது. இதயத் துடிப்பை சீராக்க வேண்டிய நேரம் இது. சுண்டு விரல் "காயம்" பற்றி பிறகு கவனிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications