அக்கறை இருக்கா? இவ்வளவு விவரமா? இட ஒதுக்கீட்டு காலியிட விவரத்தை தவிர்ப்பது ஏன்? சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை எம்பி வெங்கடேசன் எம்பி ட்வீட் பதிவிட்டு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்
சென்னை: "ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சரின் அரைகுறை பதில், கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.. இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மிக முக்கிய மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் மக்களவையில் எழுப்பப்பட்டு, அது தொடர்பான விவாதமும் நடைபெற்று வருகிறது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி நிலுவைக் காலியிடங்கள் பற்றி எழுப்பிய கேள்விக்கு (எண் 65 ) கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

கேள்வி
ஆனால் அந்த பதிலில் பதில் இல்லை என்பதே உண்மை. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத காலியிடங்கள் எவ்வளவு என்று கேட்டதற்கு தனித் தனியாக எண்ணிக்கையை தராமல் மொத்தமாக 13701 காலியிடங்கள் என பதில் தரப்பட்டுள்ளது. கேள்வியே மொத்த காலியிடங்கள் என்று ஒரு வரியில் கேட்கப்பட்டு இருந்தால் வேறு விசயம். ஆனால் பிரிவு வாரியாக கேள்வி இருக்கும் போது மொத்த எண்ணிக்கையை பதிலாக தருவதன் நோக்கம் என்ன?

நிலுவை காலியிடம்
இருந்தாலும் இவ்வளவு காலியிடங்கள் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி நிலுவைக் காலியிடங்களும் ஆயிரக் கணக்கில் உள்ளன என்பதில் ஐயமில்லை. இடஒதுக்கீட்டு ரோஸ்டர்களை தயாரிப்பதில் எந்த மத்திய கல்வி நிறுவனமாவது சிரமங்கள் இருப்பதாக அரசின் வழிகாட்டுதல்களை கோரியுள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என அமைச்சர் பதில் அளித்துள்ளார். அப்படியெனில் எல்லா மத்திய கல்வி நிறுவனங்களும் ரோஸ்டர்களை தயாரித்து இருக்க வேண்டும். இதை அரசாங்கம் சரி பார்ப்பதோடு அந்தந்த நிறுவனங்கள் ரோஸ்டர் விவரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும்.

அமைச்சகம்
கடைசி கேள்வியாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள "செயல் வடிவ பணி நியமனங்கள்" (Mission Mode Recruitment) சம்பந்தமான பதவி வாரியாக, பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டுமென்ற கேள்விக்கும் தகவல்கள் தரப்படவில்லை. மாறாக "செயல் வடிவ பணி நியமனங்கள்" (Mission Mode Recruitment) 05.09.2021 இல் இருந்து 04.09.2022 வரைக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற தகவல் மட்டும் தரப்பட்டுள்ளது.

தவிர்ப்பது ஏன்?
இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் எவ்வளவு என்ற விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? அரை குறை பதில்கள் இந்த கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. சமூக நீதி மீது அரசுக்கு அக்கறை உள்ளதா? இந்த "செயல் வடிவ பணி நியமனங்கள்" (Mission Mode Recruitment) இடஒதுக்கீடு பிரிவினரின் உரிமைகளை உறுதி செய்யுமா? என்ற கேள்விகள் எல்லாம் பதில் தேடி நிற்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications