ஹிந்தி மாணவர்களுக்கு மட்டும் 2 சான்ஸ்?.. கொந்தளித்த எம்பி வெங்கடேசன்.. கிடைத்தது வெற்றி.. நச் ட்வீட்

இந்தி அல்லாத மாணவர்களுக்கு வெற்றி என மதுரை எம்பி வெங்கடேசன் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய பட்டய கணக்காளர்கள் தேர்வில் ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி கிடைத்துள்ளதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்... இது தொடர்பான விவரங்களையும் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.

தமிழர் நலன், மற்றும் தமிழ் மொழி சார்ந்த விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் மதுரை எம்பி வெங்கடேசன்.. மத்திய அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்புகள் ஏதாவது ஒரு அறிவிப்பில் தென்பட்டால், அதற்கு முதல் நபராக எதிர்வினையாற்றி வருபவரும்கூட.

அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் ICAI எனப்படும் இன்டர் தேர்வில் மாற்றம் என்றுகூறி ஒரு அறிவிப்பு வெளியானது..

 மதிப்பீடுகள்

மதிப்பீடுகள்

அதன்படி, 13 வது அம்சம் 'இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்' என்று அழுத்தமாக கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.. ஒரே தேர்வுக்கு இந்தி மாணவர்களுக்கு மட்டும் இரண்டு வாய்ப்பு தரப்படுவது ஏன்? என்று வெங்கடேசன் கேள்வி கேள்வி எழுப்பியிருந்தார்.

 சம ஆடுகளம்

சம ஆடுகளம்

அத்துடன் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் CMA (Inter) தேர்வுகளில் இந்த பாரபட்சம் இருக்கிறது என்று ஐசிஏஐ தலைவர் (Institute of Cost Accountants of India) பி. ராஜு ஐயர், துணைத் தலைவர் விஜேந்தர் சர்மா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். எப்படி ஒரே தேர்வுக்கு இரண்டு வழிமுறைகள், இரண்டு விதமான விதிகள் இருக்க முடியும்? இது எப்படி தேர்வு எழுதுகிறவர்களுக்கு சமமான நியதியாக இருக்கும்? இந்தி அல்லாதவர்களுக்கு சமதள ஆடுகளத்தை எப்படி தரும்? விரைவு தட்டச்சுக்குப் பழகாத இந்தி தேர்வர்கள் வேகமாக கையில் எழுதி கொடுத்து விடுவார்கள்.

அநீதி

அநீதி

ஆனால் இந்தி அல்லாத மாணவர்கள் வேறு வழியில்லாமல் அதிக நேரம் எடுத்து தட்டச்சு செய்து தான் கொடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான அநீதி. குறிப்பாக பிரிவு சி&டி க்கானவற்றில் - கூடுதல் காலத்தை விழுங்குவது தவிர்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதற்குள் இப்பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுமிருந்தார்..

 கணக்காளர்கள்

கணக்காளர்கள்

இந்நிலையில், ஐசிஏஐ தலைவரின் கடிதத்தின் படி ஆங்கில வழி தேர்வர்களும் பிரிவுகள் B, C, D ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தட்டச்சு வாயிலாகவோ, எழுத்து பூர்வமாகவோ தர இயலும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..., இதையடுத்து, இந்திய பட்டய கணக்காளர்கள் தேர்வில் இந்தி அல்லாத மாணவர்களுக்கு கிடைத்த வெற்றிகிடைத்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்

விடைத்தாள்

இது தொடர்பாக ஒரு ட்விட்டையும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதில், ""ICAI (inter) தேர்வு அறிவிக்கையின் 13 வது அம்சம் 'இந்தி வழி தேர்வர்களுக்கு மட்டும் எழுத்து பூர்வமான விடைத்தாள் (Physical answer sheet) இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு இந்தி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்' என்று அழுத்தமாக கூறப்பட்டு இருந்தது.

 மன உளைச்சல்

மன உளைச்சல்

ஆங்கில வழி தேர்வர்கள் தட்டச்சு வாயிலாகவே பதில்களை அளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தட்டச்சு செய்ய நேரம் எடுக்கலாம் என்பதால் அது மதிப்பெண்களை குறைக்கும் என்று அச்சமடைந்தனர். இப் பின்புலத்திலேயே நான் ஐ.சி.ஏ.ஐ தலைவருக்கு 27.12.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன். தற்போது ஐ.சி.ஏ.ஐ தலைவரின் கடிதத்தின் படி ஆங்கில வழி தேர்வர்களும் பிரிவுகள் B, C, D ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தட்டச்சு வாயிலாகவோ, எழுத்து பூர்வமாகவோ தர இயலும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

அறிவிக்கையின் விதிமுறை எண் 13 இல் இருந்த குழப்பத்திற்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் எல்லா தேர்வு மையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்" என்று வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.. அதாவது, ஹிந்தி வழி படித்தவர்களுக்கு மட்டுமே வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தி - ஆங்கிலம் இரு மொழி தேர்வர்களுக்கும் இப்போது சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+