சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு.. தூண்டியது நானா? "தலைமையின்" கட்டளைபடி நடந்தேன்.. சரவணன் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் பிடிஆர் காரின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு நான் காரணமா, இல்லை, எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைபடி நான் நடந்து கொண்டேன் என டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பாஜகவில் இருந்து விலகிவிட்டேன் - மதுரை சரவணன்

    வீரமரணமடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இந்த சம்பவம் பெரும் கண்டனத்துக்குள்ளானது.

    தங்களை அமைச்சர் அவமானப்படுத்திவிட்டார், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நேற்று மாலை கொந்தளித்த டாக்டர் சரவணன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் போராட்டம் வெடிக்கும் என்றார்.

    கட்சிக்கு களங்கம்.. பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு கட்சிக்கு களங்கம்.. பாஜகவிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

    மதுரை

    மதுரை

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மதுரையில் உள்ள பிடிஆர் வீட்டுக்கு டாக்டர் சரவணன் சென்றார். அங்கு பிடிஆருடன் பேசிவிட்டு வெளியே வந்த சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நேற்று நிகழ்ந்தது விரும்பத்தகாததாகும். பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. பாஜகவிலிருந்து நான் விலகுகிறேன் என்றார்.

    டாக்டர் சரவணன்

    டாக்டர் சரவணன்

    இந்த நிலையில் பாஜகவிலிருந்து டாக்டர் சரவணனை நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை அறிவித்தார். அப்போது இதுகுறித்து டாக்டர் சரவணன் தமிழ் தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், என்னை நீக்கிய அண்ணாமலைக்கு நன்றி. மற்றபடி பாஜக நிர்வாகி நிர்மல் குமார் சொன்னது போல் நேற்று நட்நத பிரச்சினைக்கு நான் காரணம் அல்ல.

     நீக்க ஒரு காரணம்

    நீக்க ஒரு காரணம்

    என்னை நீக்குவதற்காக ஏதாவது ஒரு காரணம் சொல்லித்தானே ஆகணும். நான் ஒரு தலைமையின் கீழ் பணியாற்றியிருக்கிறேன். அவர்கள் இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என கூறும் போது அவர்களுடைய கட்டளைபடிதான் நான் நடந்து கொண்டேன். கட்சியினரையும் தவறாகவே வழி நடத்துகிறார்கள்.

     நானா தூண்டிவிட்டேன்

    நானா தூண்டிவிட்டேன்

    நான் பாஜகவிலிருந்து விலகுகிறேன் என சொன்னதற்கு அவர்கள் அப்படி சொல்கிறார்கள். நான் சும்மா இருந்தாலும் நான்தான் தூண்டிவிட்டேன் என சொல்வதற்கு கூட வாய்ப்பிருக்கிறது என சரவணன் தெரிவித்தார். டாக்டர் சரவணன் விரைவில் திமுகவில் இணைந்துவிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Madurai Saravanan says that i and BJP cadres were misguided yesterday by our leader in PTR issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X