வரி முறைகேடு விவகாரம்: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொன்வசந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 5 மண்டலங்களைத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடு விவகாரத்தை மதுரை டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸார் பொன் வசந்தை மதுரை அழைத்து சென்றனர்.
அதேபோல, தூத்துக்குடி உதவி ஆணையர் சுரேஷ்குமாரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, சுரேஷ்குமாரையும் போலீசார் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications