ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?.. மதுராந்தகத்தில் உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் உரையாற்றினார். அப்போது, ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?. தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா. நாட்டில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது. திமுகவுக்கு வாக்களித்தால் ஆபாச பேச்சை ஆதரிப்பதாகிவிடும். ஆபாசமாக பேசுவோருக்கு தண்டனை கொடுங்கள் என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Madurantakam Byelection Vijay

விஜய் பிரசாரம்

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் விஜய் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், ஈசூர் - பூதூர், மதுராந்தகம் வழியாக வந்து அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக மைதானத்தை முதல்வர் விஜய் வந்தடைந்தார்.

5 ஆயிரம் பேருக்கு அனுமதி

ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய்க்கு தவெக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய் பேசியதாவது: முதலமைச்சராக நான் இங்கு வரவில்லை, உங்கள் வீட்டு பிள்ளையாக, தம்பியாக வந்திருக்கிறேன். ஏன் இந்த விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?. தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா. நாட்டில் ஆபாச நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

திமுக ஏன் ஆபாசமாக பேசுகிறது. ஜெயலலிதாவை அன்று ஸ்டாலின் அவதூறாக பேசினார். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் பேசுகிறார்கள். திமுகவுக்கு வாக்களித்தால் ஆபாச பேச்சை ஆதரிப்பதாகிவிடும். ஆபாசமாக பேசுவோருக்கு தண்டனை கொடுங்கள். இந்த இடைத்தேர்தல் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+