கிளைமேக்ஸ் நெருங்கிடுச்சு..மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்! நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாளையுடன் அங்கு பிரச்சாரம் ஓயும் நிலையில் ஆறாம் தேதி வாக்குப்பதிவு ஒன்பதாம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அடுத்த தேர்தலை சந்திக்க இருக்கிறது தமிழகம். மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

by election 2026 TVK Madurantakam Dharapuram

தற்போது அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மரகதம் குமரவேல், சத்யபாமா ஒரு மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். இதைப் போல மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகு​தி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் லட்​சுமணனும், மது​ராந்​தகம் தொகு​தி​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சுகந்​தி​யும் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதனால், இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தற்போது 2 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அந்த இரண்டு தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நாளை மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது 6ஆம் தேதி வாக்கு பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. தாராபுரத்தில் நாளை மீண்டும் முதல்வர் விஜய் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 தொகுதிகளிலும் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிந்ததும், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள், வெளியூர்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+