'ஆளும் வளரனும் அறிவும் வளரனும்'.. ஆதவ் அர்ஜுனாவை கண்டித்த மதுராந்தகம் திமுக வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி என அதுதான் வளர்ச்சி என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மதுராந்கதம் திமுக வேட்பாளர் பரந்தமான் கடுமையாக சாடினார்.மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட தவெகவிற்கு வேட்பாளரே இல்லையே ஏன்? - அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கி வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக குற்றச்சாட்டி உள்ளார் பரந்தாமன்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்கரணை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் பாக் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பரந்தாமன், ஆட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது, ஆனால் 4 நிமிடம் கூட தன்னுடைய ஆட்சியின் சாதனை வாக்கு கேட்க முடியவில்லை, திமுகவையும் திமுக தலைவரையும் எதிர்க்கட்சி தலைவரையும் திமுக சார்பாக தேர்தல் பணி ஆற்ற வந்துள்ள முன்னாள் அமைச்சர்களை பற்றி ஒப்பாரி வைத்துள்ளார்.

Maduranthakam DMK candidate Paranthaman condemns Minister Adhav Arjuna s speech

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய சொந்த செல்வாக்கையோ, தங்களுடைய ஆட்சியை திட்டங்களை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, காலி குடம் மதுராந்தகத்தில் சத்தம் போட்டுவிட்டு சென்றுள்ளது. கலைஞரின் பேரன் என உதயநிதிக்கு வரலாறு உள்ளது. ஆனால் ஆதவ் அர்ஜூனாவிற்கு என்ன உள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக திமுக காரனை பற்றி பொய் பிரச்சாரம் செய்ய வந்துள்ளீர்களே, இதை சொல்வதற்கு ஆதவ் அர்ஜுனாவிற்கு தார்மீகம் உள்ளதா? எம்எல்ஏவை கோடி கணக்காண ரூபாய் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என பட்டுக்கோட்டையார் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவிற்கு அறிவு வளர்ந்துள்ளதா என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை, தமிழக மக்களுக்கும் மதுராந்தகம் மக்களுக்கும் நன்றாக தெரியும். தேர்தல் பணியாற்ற வந்துள்ள தவெகவினர் உங்களுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும்.

உதயநிதி கைது பண்ணுவதற்கு அவர் பெரிய ஆள் இல்லை எனக் கூறினீர்களே? இது கைதுக்கான ரிப்போர்ட். கைது செய்யும் போது நான் உடனிருந்தேன். மதுராந்தகத்தில் வந்து உட்கார்ந்து விட்டு பொய்யாக பேசினால், அனைவரும் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என கனவு காணக் கூடாது. தொகுதியில் எங்கு சென்றாலும், மின்வெட்டு பிரச்சனை, மின்சார விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை பற்றி பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தேவையில்லாமல் திமுகவினரை சீண்டினால் நான் தெருக்கு தெரு மேடை போட்டு பேசுவேன். வேதாளத்திற்கு முருங்கை மரத்தைப் பற்றி தான் நியாபகம் இருக்கும், திமுகவிற்கு ஆலமரத்தை பற்றி தான் எண்ணம் இருக்கும். 75 வருட கட்சியை பேக் செய்து விட்டேன் என கூறுகிறார்களே, ஆனால் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அவர்களுக்கு வேட்பாளரை இல்லையே ஏன்? அதிமுக வேட்பாளரை வாங்கி தமிழக வெற்றி கழக வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துகிறார் ஆதவ் அர்ஜுனா என விமர்சனம் செய்தார். என்னுடைய வெற்றி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என திமுக வேட்பாளர் பரந்தாமன் பேட்டி அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+